கள்ளக்காதல் போதை.. கால்களை வெட்டிவிட்டு, காதலன் வெறிச்செயல்.! விபரீத ஆசையால் பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் திரிகோவில்வாட்டம் பகுதியை சார்ந்தவர் சுசித்ரா (வயது 42). இவர் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறி சென்ற பின்னர், வீட்டிற்கு திரும்பவில்லை. இவரது அலைபேசிக்கு முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லாததால், தங்களுக்கு தெரிந்த இடங்களில் தேடியுள்ளனர். 

இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதியன்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், சுசித்ரா பணியாற்றி வந்த அழகுநிலைய முதலாளியிடம் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி விடுமுறை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் சுசித்ராவின் அலைபேசியை சோதனை செய்துள்ள நிலையில், பாலக்காடு பகுதியை சார்ந்த இசை ஆசிரியரான பிரசாந்த் என்பவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், சுசித்ராவின் கொலைக்கான மர்மம் வெளியாகியுள்ளது.

கடந்த 18 ஆம் தேதியன்று பிரசாந்த் தனது குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு, சுசித்ராவுடன் உல்லாசமாக இருந்த நிலையில், இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்ததும், கொலையை மறைக்க கால்களை துண்டித்து எரிக்க முயற்சி செய்ததும், உடலை வீட்டின் பின் புறத்தில் அடக்கம் செய்ததும் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed by her boyfriend during enjoy


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal