அடக்கடவுளே! குடும்பம் நடத்த மனைவி மறுப்பு... தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட காதல் கணவன்...!
wifes refusal to run a family loving husband who committed suicide
திருவள்ளூர் ஆவடி காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்த 22 வயது என்ஜினீயரான தீனதயாளன் என்பவர்.இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி 20 வயதான லாரன்ஜினா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே,கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்டு லாரன்ஜினா, கடந்த சில தினங்களுக்கு முன் சேக்காடு பகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இந்த நிலையில், தீனதயாளன் நேற்று சேக்காடு சென்று தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் லாரன்ஜினா அதற்கு மறுத்ததோடு, தனது தாலியை கழற்றி கீழே வைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் விரக்தியடைந்த தீனதயாளன், மாமியார் வீட்டின் அருகிலுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காக கீழே குதித்துவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த தீனதயாளன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆவடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
wifes refusal to run a family loving husband who committed suicide