ஓயாமல் ஓரினசேர்க்கை தொந்தரவு.! இடைவிடாத தொல்லையால், துடிதுடித்து பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


ஓயாமல் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நண்பரை தொல்லை தாங்காமல் மற்றொரு நண்பரே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி இருக்கின்றது. 

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டுவும், ரம்மிளனும் சிங்ககட் கல்லூரியில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் உயிருக்குயிரான நல்ல நண்பர்கள். பாண்டு தன்னுடைய நண்பரான ரம்மிளனை பாலியல் உறவுக்கு வருமாறு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரம்மிளன் தன்னுடைய நண்பரான பாண்டுவை கத்தியால் குத்தி அவருடைய உடலுக்கு தீ வைத்து எரித்து தூக்கி எறிந்து இருக்கின்றார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். 

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தன்னுடைய நண்பரை அவரே கொலை செய்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in uttarpredesh due to homo sex torched


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal