7 இளம்பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நாடக காதலன்.! மேலும் சில பெண்கள்...?!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அடப்பா சிவசங்கர் பாபு என்ற ஐ.டி நிறுவன ஓழ்த்தியர் என்றும், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து உள்ளார்.

மேலும், திருமணமாகி விவாகரத்து பெற்று பெண் வரன்களை தேடி கண்டுபிடித்து தனது நாடக காதல் வலை வீசியுள்ளார். அவருடம் சிக்கும் பெண்களை பேசி பேசியே மனதை மயக்கியுள்ளார். 

இதில், விவாகரத்து ஆன 7 இளம்பெண்கள் நாடக காதலின் வலையில் வீழ, அவர்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார். 

அதில்; ஒரு  பெண்ணிடம் மட்டும் 30 லட்சம் ரூபாய், ஏராளமான நகைகளை ஏமாற்றி வாங்கிச்சென்று அடகு வைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

சிவசங்கர் பாபுவால் ஏமாந்த பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா காவல் நிலையங்களில் புகார் அளிக்கவே, புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபுவை தேடிவந்தனர். 

இந்நிலையில், கச்சிபவுலி காவல்நிலைய போலீசார் சிவசங்கர் பாபுவை கைது செய்தனர். இதுபோல் எத்தனை பெண்களை இவர் ஏமாற்றி உள்ளார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drama lover forgery marriages


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal