காதலிக்க மறுத்த சிறுமி! வீடுபுகுந்து வெட்டி கொலை செய்த நாடக காதலன்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் காதலிக்க மறுத்த 14 சிறுமியை, வீடு புகுந்து நாடக காதலன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரா மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், ராம்பில்லி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை நேற்று இரவு, நாடக காதலன் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையின் படி, அந்த சிறுமிக்கு சுரேஷ் என்ற 26 வயதில் இளைஞர் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து ஏற்கனவே பலமுறை தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி அளித்த புகாரின் பேரில் சுரேஷ் அண்மையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், நேற்று இரவு சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சுரேஷ்.

அதன்படி பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த சுரேஷ், அந்த சிறுமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த சிறுமியை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh minor girl hacked to death


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->