அதிரடி! பொது புழக்கத்திலிருந்து 'காலனி' என்ற சொல் நீக்கப்படும்...! - மு.க ஸ்டாலின் 
                                    
                                    
                                   word colony removed from public circulation MK Stalin
 
                                 
                               
                                
                                      
                                            சென்னையில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," 'காலனி' என்ற சொல் பொது புழக்கத்திலிருந்து நீக்கப்படும்" என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,"'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருக்கிறது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாகவுள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
அரசு ஆவணங்களில் இருந்தும் நீக்கப்படும். 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது அரசியல் ஆர்வாளர்களிடையே பேசுபொருளாக இருக்கிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       word colony removed from public circulation MK Stalin