ரூ.25 ஆயிரத்துக்கு பெண் கிடைக்கும்...! - பீகார் பெண்கள் குறித்து பாஜக அமைச்சர் கணவரின் பேச்சு பெரும் சர்ச்சை - Seithipunal
Seithipunal


பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா பதவி வகித்து வருகிறார். அவரது கணவர் கிரிதாரி லால் சாஹு பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

இந்நிலையில், கிரிதாரி லால் சாஹு பீகார் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கிரிதாரி லால் சாஹு, அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணம் குறித்து பேசினார். அப்போது,“இன்னும் திருமணம் ஆகவில்லையா? வயதான பிறகா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலை வேண்டாம்.

உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால், பீகாரிலிருந்து பெண் அழைத்து வந்து தருவோம். அங்கே ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்தால் பெண் கிடைப்பார்” என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.இந்த கருத்து பீகார் மாநில மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பீகார் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பெண்களை இழிவுபடுத்தும் பாஜகவின் மனநிலையை இந்த பேச்சு வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டின. அதே நேரத்தில், பீகார் மாநில பாஜகவே இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.“பீகார் பெண்கள் சந்தையில் வாங்கி விற்கும் பொருட்கள் அல்ல.

இது ஒட்டுமொத்த பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என்று பீகார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.மேலும், “பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் கணவராக இருப்பவர் இவ்வாறு பேசுவது, அவரது சிந்தனையின் தாழ்வை வெளிப்படுத்துகிறது” என்று பீகார் மாநில மகளிர் ஆணையத் தலைவர் அஸ்பரா கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மகளிர் ஆணையம் கிரிதாரி லால் சாஹுவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.இதற்கிடையே, தனது கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், பெண்களை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறி, கிரிதாரி லால் சாஹு மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman bought 25000 statement by husband BJP minister regarding women from Bihar sparks major controversy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->