16% GSDP வளர்ச்சியுடன் இந்தியாவில் நம்பர் ஒன்...! ‘இது திராவிட மாடல்!’ – முதல்வர் ஸ்டாலின்
With 16percentage GSDP growth number one India This Dravidian model Chief Minister Stalin
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டின் பொருளாதார சாதனையை பெருமிதத்துடன் எடுத்துரைத்துள்ளார்.அவர் கூறியதாவது,“வானளாவிய GSDP வளர்ச்சி விகிதத்தில், இந்தியாவின் பல பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. பரப்பளவில் பெரிய மாநிலமல்ல, மக்கள் தொகையிலும் மிகப் பெரிய மாநிலமல்ல, மத்திய அரசின் சிறப்பு ஆதரவும் அதிகம் இல்லை.

ஆனால் இத்தனை தடைகளையும் தாண்டி, 16 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் GSDP-யில் தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்திருக்கிறது என்றால், அதுவே திராவிட மாடலின் வலிமை!”.
மேலும் அவர் கூறுகையில்,"கடந்த மூன்று ஆண்டுகளில் நிலைத்தன்மையுடன், அதே நேரத்தில் அதிவேகமாக வளர்ந்த மாநிலம் தமிழ்நாடுதான். இதை சொல்வது அரசியல் கருத்தல்ல; இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே இதற்குச் சாட்சி. 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ.10.5 லட்சம் கோடி உயர்ந்து, தற்போது மொத்த மதிப்பு ரூ.31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நம்முடன் ஒப்பிடத்தக்க வளர்ச்சி பெற்ற பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை கூட மிஞ்சும் இந்த வளர்ச்சி விகிதம், தமிழ்நாட்டுக்கே உரிய பெருமை என்றும், தனிநபர் வருமான உயர்விலும் தமிழ்நாடு தொடர்ச்சியாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக,"2031-ஆம் ஆண்டில் ‘திராவிட மாடல் 2.0’ நிறைவு பெறும் போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்காத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். இது என் உறுதியான இலக்கு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
With 16percentage GSDP growth number one India This Dravidian model Chief Minister Stalin