பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்கிறாரா முதலமைச்சர் விஜய்...? - நாளை தொடங்கும் டெல்லி பயணம்...! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணமாக இது பார்க்கப்படுகிறது.

நாளை தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ள முதல்-அமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி விஜய் பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், பின்னர் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பின்னர் இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்றதன் மூலம் அமைச்சரவை முழுமையான வடிவத்தை பெற்றது.

தொடர்ச்சியான நிர்வாக மற்றும் அமைச்சரவை பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜயால் வெளிமாநில பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அமைச்சரவை முழுமையடைந்துள்ள நிலையில், மத்திய அரசுத் தலைவர்கள் மற்றும் தேசிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சி, நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் விஜய் டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Chief Minister Vijay meet Prime Minister Modi and Rahul Gandhi Delhi trip begins tomorrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->