சீமான் ஏன் பதறுகிறாரு..இதுதான் திமுக குடுத்த பிளானா?கரூரில் பொய் கையெழுத்து வாங்குனது யாரு? அண்ணாமலை கேள்வி!
Why is Seeman panicking is this the DMK crazy plan Who got the fake signature in Karur Annamalai question
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கே தெரியாமல் வழக்குத் தொடரப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அச்சம்பவத்துக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, தவெக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையெழுத்து வாங்கி வழக்குத் தொடரப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுவனின் தந்தை மற்றும் மனைவியை இழந்த செல்வராஜ் உள்ளிட்ட இருவரும், “நாங்கள் எந்த மனுவுக்கும் கையெழுத்து இடவில்லை, எங்களை ஏமாற்றி மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்” என்று கூறியுள்ளனர். இதனால், வழக்கு மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது.
இதைப் பற்றி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகிய பின் செய்தியாளர்களிடம் கூறினார்:“கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்கள் உள்ளன. ஆனால், அவர்களுக்குத் தெரியாமல் சிலரிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி வழக்கில் சேர்த்துள்ளனர். இதை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். யார் அவர்களை ஏமாற்றினர், யார் தவறாக வழிநடத்தியது என்பது வெளிச்சம் பார்க்க வேண்டும்.”
மேலும்,“கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது என சீமான் கூறுகிறார். ஆனால் ஏன் அந்த பதட்டம்? எங்களைப் பொருத்தவரை 41 குடும்பங்களுக்கும் முழு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம்,”என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான இந்த புதிய குற்றச்சாட்டுகள், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பதைக் காத்திருக்கிறது மாநில அரசியல் வட்டாரம்.
English Summary
Why is Seeman panicking is this the DMK crazy plan Who got the fake signature in Karur Annamalai question