2026-ல் நடந்தது... 2029-லும் நடக்கும்...! விஜய் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா...? - தவெக எம்.எல்.ஏ கனிமொழி பரபரப்பு கருத்து...!
What happened 2026 will happen 2029 too Vijay next Prime Ministerial candidate tvk MLA Kanimozhi sensational comment
2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் முன்னிறுத்தப்படுவார்” என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"2029-ம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமானதாக இருக்கும்.

ஆனால், இந்த முறை பிரதமர் யார் என்பதை டெல்லியில் இருந்து தீர்மானிக்க முடியாது. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
2029-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றம் நிச்சயம் ஏற்படும்.நமது தலைவர் விஜய்யை முதல்-அமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்.
அவரே நமது தலைவரின் கையைப் பிடித்து 2029-ம் ஆண்டு பிரதமர் பதவியில் அமர வைப்பார்.2025-ம் ஆண்டு நாங்கள் கணித்தது 2026-ல் நடந்தது.
அதேபோல், 2029-ம் ஆண்டிலும் நாங்கள் கணித்தது நடைபெறும்” என்று கனிமொழி தெரிவித்தார்.கனிமொழியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
What happened 2026 will happen 2029 too Vijay next Prime Ministerial candidate tvk MLA Kanimozhi sensational comment