அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஊடகங்களிடம் தகவல்களைப் பகிரத் தடை; மேற்கு வங்க அரசு உத்தரவு..!
West Bengal Government Issues Ban Order Prohibiting Government Officials from Sharing Information with the Media
நடந்து முடிந்த மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிமுனால் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக தனி பெரும்பான்மையாக வெற்றிப்பெற்று, முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
முதல்வராக சுவேந்து அதிகாரி பதியேற்ற நாள் முதல் சில கலவரங்களை அங்குள்ள சில சமூக விரோதிகள் நடத்தி வருகின்றனர். இந்த பதற்றமாக சூழலில், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஊடகங்களிடம் பேச அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
அகில இந்தியப் பணி, மேற்கு வங்க குடிமைப் பணி, மேற்கு வங்க காவல் துறைப் பணி, மேற்கு வங்க அரசுப் பணி ஊழியர்களால் தகவல்களைப் பரப்புதல் என்ற தலைப்பில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், எந்தவொரு அரசு உத்தரவும் இல்லாமல், மேற்கண்ட பணிப் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆவணங்கள் அல்லது தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், செய்தித்தாள்களில் எழுதுவது, தொலைக்காட்சி அல்லது வானொலி விவாதங்களில் பங்கேற்பது, அரசு குறித்தோ அல்லது அதன் கொள்கைகள் குறித்தோ விமர்சனக் கருத்துகளைத் தெரிவிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுடனோ அல்லது பிற மாநிலங்களுடனோ உள்ள உறவுகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளையோ அல்லது தகவல்களையோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அரச அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
West Bengal Government Issues Ban Order Prohibiting Government Officials from Sharing Information with the Media