விஜய்யின் தீவிர ரசிகர்கள் TO தவெக அமைச்சர்கள்; கோவையை பிரமிக்க வைத்துள்ள சம்பத்குமார், விக்னேஷ்..!
Coimbatore Sampathkumar and Vignesh ardent fans of Vijay who became ministers in the TVK
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை பிடித்து தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். இதில் கோவைக்கு 02 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.
இந்த தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 06 தொகுதிகளை யாரும் எதிர்பாராத வகையில் தவெக பெரும் வாரியாக கைப்பற்றியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சம்பத்குமார், கிணத்துக்கடவு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.விக்னேஷ் ஆகியோருக்கு அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் இவர்கள் 02 பேரும் பல ஆண்டுகாலமாக நடிகர் விஜய்யின் ரசிகராக இருந்த நிலையில், தவெக தொண்டராக மாறி இன்றைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது அமைச்சர்களாகவும் மாறியுள்ளனர்.

கடந்த கால தேர்தல்களில் கோவையில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தை பெரும்பான்மையாக தவெக கைப்பற்றியதால் இன்றைக்கு கோவைக்கு 02 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் பிரச்சாரம் செய்யாமலேயே பெரும் வெற்றியைத் தந்த மாவட்டங்களில் ஒன்றாக கோவை இருக்கிறது. இதற்கு பரிசாக 02 அமைச்சர்கள் தற்போது கிடைத்துள்ளதாக சஉள்ளூர் தவெகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வான விக்னேஷுக்கு (38) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமாருக்கு (47) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விக்னேஷின் மனைவி கீர்த்திகா. இந்த தம்பதியருக்கு வெண்பா, யாழ்நிலா என்ற 2 மகள்கள் உள்ளனர். பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரி இவர், விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது தவெகவின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் தொழிலை செய்து வந்தவர்.
அடுத்ததாக, அமைச்சர் சம்பத்குமாரின் மனைவி சரண்யா. இந்த தம்பதியருக்கு இஷ்வா என்ற மகனும், ஸ்ரீ வீரஜெய்ஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பி.ஏ. பயின்றவர். விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் உருவானதும், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். நெய் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Coimbatore Sampathkumar and Vignesh ardent fans of Vijay who became ministers in the TVK