'பல மாநிலங்களில் புறக்கணக்கப்பட்ட காங்கிரஸ் புறவாசல் வழியாக தமிழாக அரசியலில் இடம்பெற்றுள்ளது'; தமிழிசை சவுந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட  காங்கிரஸ் கட்சி, புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

எந்த தீய சக்தியை எதிர்த்து போராடுவோம் எனச் சொன்னார்களோ, அந்த தீய சக்தியின் ஒரு பகுதியாக இருந்தவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்று தவெக அரசை சாடியுள்ளார்.

அத்துடன், புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதாகவும், பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, ஊழல் அதிகமாக செய்த கட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றங்களை கொண்டு வருவோம் என சொன்ன தவெக இனி எப்படி இதை செய்யப்போகிறார்கள் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும் என்றும்,  காங்கிரஸின் அழுத்தத்துக்கு அவர்கள் இடம் கொடுக்கக் கூடாது எனவும், அமைச்சரவையில் உள்ளவர்களை விஜய் சரியாக வழிநடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், பிஎம்ஸ்ரீ, புதிய கல்விக் கொள்கை இவையெல்லாம் நல்ல திட்டம் என்றும், திமுக ஆட்சி அதை வேண்டா வெறுப்பாக அணுகியதால்தான் மக்கள் இம்முறை அவர்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று, 'வந்தே மாதரம்' பாடல் நமது நாட்டு உணர்வை தட்டி எழுப்பிய பாடல். இதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு பின்னால் தேச நலன் இருக்கிறது. ராகுல் காந்தியும் தான் சுற்றுப் பயணம் செல்கிறார். ஆனால், பிரதமரின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணமும் இந்தியாவின் நலனுக்கு பயனுள்ளதாக அமையும் என்று செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai Soundararajan criticizes the Congress stating that it has gained a foothold in Tamil Nadu politics through the back door


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->