அவ்ளோதான்....! விடியா ஆட்சிக்கு முடிவு எழுதுவோம்...! எம்.ஜி.ஆர் நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி சூளுரை....! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து பின் வருமாறு:
தமிழக அரசியல் வரலாற்றில் ஒளிவீசும் பொற்காலமாக என்றும் நினைவுகூரப்படும் தலைவர்… ஏழை, எளிய மக்களின் வலியையே தனது வலியாக ஏற்று, அன்பையும் அருளையும் அரசியல் மொழியாக மாற்றிய மக்கள் திலகம்.

ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு முழுத் தலைமுறையின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்கிய வாழ்நாள் வழிகாட்டி.சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என தமிழக வளர்ச்சியின் எந்தத் துறையை எடுத்தாலும், அதன் வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்த சிற்பி.

ஒப்பாரும் மிக்காருமற்ற முதல்வராக, திராவிட இயக்கக் கொள்கைகளை திரைமுகமாக எளிய மக்களின் உள்ளங்களில் விதைத்த பேராளுமை.பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து, தமிழகத்தை ஒரு குடும்பத்தின் கொள்ளைக் காடாக மாற்ற முயன்ற காலத்தில், மக்களாட்சியின் மாண்பையும், ஜனநாயகத்தின் அடையாளத்தையும் காத்து நின்ற அண்ணா வழிப் பேரியக்கம் – அதிமுகவை நிறுவியவர் நம் கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்றும், இன்றும், என்றும் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்.“பாரத ரத்னா” விருது பெற்ற இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்றைய தினத்தில், நம் உயிர்நிகர் தலைவருக்கு பணிந்து வணங்குகிறேன்.

அவரது பெருமையும், வரலாற்றுச் சாதனைகளும் இன்றும் எங்களை வழிநடத்துகின்றன.புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை உருவாக்கிய உயரிய நோக்கத்தை, அவர் எவ்வாறு செயல்படுத்திக் காட்டினாரோ, அதேபோல் அதை மீண்டும் நடைமுறைப்படுத்தி, மக்களைக் காக்கவும், தமிழகத்தை மீட்கவும் இன்று நமக்கு கடமை உள்ளது என்பதை உணர்ந்து, மக்கள் விரோத விடியா ஆட்சி நடத்தும் திமுக எனும் தீய சக்திக்கு, தமிழக மக்களின் துணையுடன் முடிவுரை எழுத உறுதியேற்போம்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We write end incompetent regime Edappadi Palaniswami pledge MGRs death anniversary


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->