காட்டாட்சியை மீண்டும் அனுமதிக்க மாட்டோம்...! புல்டோசர் மாடல் பீகாரிலும்...! - யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில அரசியலின் வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும்.இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 122 தொகுதிகளில் அடுத்த மாதம் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குகள் அடுத்த மாதம் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.இம்முறை தேர்தல் கடுமையான போட்டியை எதிர்நோக்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA) மற்றும் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன.NDA கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாச்வான்) உள்ளிட்டவை இணைந்துள்ளன.

இதேபோல் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்துள்ளன.தேர்தல் வெப்பம் உயரும் நிலையில், இரு தரப்பினரும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமஸ்திபூரில் நடைபெற்ற பெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அவர் தனது உரையில் தெரிவித்ததாவது,"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்டிரீய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது பீகார் சட்டமற்ற அரசாக மாறியிருந்தது.

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர், ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன, மாநிலம் முழுவதும் காட்டாட்சி நிலவியது. ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியில் தான் நல்லாட்சியின் வெளிச்சம் தெரிந்தது.இன்று பீகாரில் ஐஐஎம், ஐஐடி, எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை உருவாகி, விவசாயப் பொருட்கள் சர்வதேச சந்தைகளுக்கே சென்றடைகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் போலவே, புல்டோசர் நடவடிக்கை பீகாரிலும் தொடங்கும். சட்டம் மீறி மக்களை துன்புறுத்தும் ரவுடிகள், இனி பீகாரில் தஞ்சமடைய முடியாது,” என யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.அவரது உரையால், தேர்தல் களத்தில் பரபரப்பு மேலும் உயர் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will not allow spectacle again Bulldozer model in Bihar too Yogi Adityanaths dramatic speech


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->