தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? - Seithipunal
Seithipunal


தமிழ் மொழி​யை நாங்கள் கவனித்து கொள்கிறோம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு இருந்தார். மத்திய அரசின் அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக இந்தியை கொண்டு வருவது குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இந்தி மொழி நாளன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இது போன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். இதற்கு ஸ்டாலின் கட்டாய ஹிந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "தமிழ் மொழி​யை நாங்கள் கவனித்து கொள்கிறோம். ஆட்சியை கவனியுங்கள். கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை விட்டீர்கள்.  முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ அப்போதெல்லாம் மொழி பிரச்சனையை எழுப்புவது திமுகவின் திராவிட மாடல்" என தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We take care of Tamil language Tamil Nadu BJP President Annamalai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->