கன்னா பின்னான்னு எங்களுக்கும் பேச தெரியும்...!-கடும் எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார் - Seithipunal
Seithipunal


தமிழர் தந்தை எனப் போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121-வது பிறந்த நாளையொட்டி, எழும்பூரில் இருக்கும் அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் 'ஜெயக்குமார்' மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர் குறிப்பிட்டதாவது,"பிரபல பத்திரிகையை நிறுவி, பட்டி தொட்டி எங்கும் தமிழின் மணத்தை பரப்பியவர் சி.பா. ஆதித்தனார். சட்டமன்ற தலைவராக அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.

நான் இன்று அமர்ந்திருக்கும் அந்த நாற்காலியில் ஒருகாலத்தில் சி.பா. ஆதித்தனார் அமர்ந்திருந்தார். அந்த ஆசனத்தில் என்னை அமர வைத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. இது என் வாழ்க்கையின் மிகப்பெரும் பெருமையாகும்” என நினைவுகூர்ந்தார்.

அதன்பின், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,"மறைந்த தலைவர்களை விமர்சிப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா, பின்னா என்று நாங்களும் பேசி விட்டு சிரிக்க தெரியும்” என எச்சரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We also know how to blabar Jayakumar issues stern warning


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->