பாஜகவில் இணைய போகும் திமுகவின் முக்கிய புள்ளி.. கலக்கத்தில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை விடுவித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும், திமுக துணை பொதுச்செயலாளராக எம்.பி. அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி பி துரைசாமி, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இதையடுத்து, திமுகவின் துணை செயலாளர் பதவியிலிருந்து வி பி துரைசாமி நீக்கப்பட்டதாக முக ஸ்டாலின் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக வி.பி.துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கருணாநிதி அழைத்தார் என்பதால் 2001 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்து. திமுகவில் சேர்ந்த எண்ணெய் 2006 ஆம் ஆண்டு துணை சபாநாயகர் ஆக்கி அழகு பார்த்தார் . இப்போது திமுகவில் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளேன். இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vp duraisamy join bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal