பொன்முடி வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Villupuram court ordered Jayakumar to appear in Ponmudi case
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

அவர்களில் முக்கியமான சாட்சிகளாக கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் அரசு தரப்புக்கு பாதகமாக சாட்சியம் அளித்துள்ளதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மூலமாக கடந்த 8ம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக எங்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணை செய்த விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இந்த மனு மீதான விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு அன்றைய தினம் மனுதாரரான ஜெயக்குமார் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
English Summary
Villupuram court ordered Jayakumar to appear in Ponmudi case