'என்னை காமராஜர் என்று சொல்ல வேண்டாம்': மேடையில் விஜய் பேச்சு..!
Vijays speech on stage asking not to call me Kamaraj
த.வெ.க., தலைவர் விஜய் 10, 12-ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார். குறித்த நிகழ்வு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று ஜூன் 13-ஆம் தேதி 03-ஆம் கட்டமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
''2026-ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர், இளைய காமராஜர் என்று அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள்'' என தெரிவித்துள்ளார், அத்துடன், அவர் 'நேற்று குஜராத்தில் ஒரு மிகப்பெரிய சோகமான விமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படத்தை பார்க்கும் போது மனது பதறுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்தவர்கள் எல்லாருக்காகவும் 02 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்துவோம் எனவும், எல்லோரும் ரொம்ப துரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள். இந்த சந்தர்ப்பத்தில், யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர் மற்றும் இளைய காமராஜர் அப்படி ஏதும் சொல்லாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன், நீங்கள் உங்களுடைய ஆசிரியர், உங்கள் பள்ளிக்கூடம் பற்றி பேசுங்கள், மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள். தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பேசாதீர்கள் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
English Summary
Vijays speech on stage asking not to call me Kamaraj