விஜய் அறிவிப்பு! கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமனமான அருண்ராஜ்...! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழக தலைவர் 'விஜய்' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் Propananda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.

இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:
1. திருமதி R. ராஜலட்சுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
2. S.டேவிட் செல்வன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்
3. டாக்டர் A. ஸ்ரீதரன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
4. டாக்டர் N. மரிய வில்சன், நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிப்பூட் ஆஃப் டெக்னாலஜி
5. சி.சுபாஷ், முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜுடிசியல் சர்வீஸ், சென்னை.
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது பல்வேறு கருத்துக்களை இணையத்தில் கண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays announcement Arunraj appointed as general secretary for policy and outreach


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->