படிக்கட்டில் பயணம்..ரெயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள்பலி ! - Seithipunal
Seithipunal


தானேவை அடுத்த மும்ப்ரா ரெயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராட்டிய தலைநகர் மும்பையில் வழக்கமாகவே புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.தொழில்,மற்றும் வர்த்தக நகரமான இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வர்த்தகம் மற்றும் தொழில் செய்து வருகின்றனர்,இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருவிழா கூட்டம் போல ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு காணப்படும்.

இந்த நிலையில், இன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது.அப்போது அதிக கூட்டம் காரணமாக ரெயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர்.

இந்தநிலையில் தானேவை அடுத்த மும்ப்ரா ரெயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காயமடைந்தவர்களை ரெயில்வே காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக மும்பை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தானே - மும்பை புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Journey on the platform 5 passengers died after falling off the train


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->