தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.. விஜயகாந்த் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் படகுகளை தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாகவோ, அரசாங்கமோ படகுகளை வழங்கவில்லை.

இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இலங்கை அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு  எந்த அதிகாரமும் கிடையாது. 

குடியரசு தின விழா கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.  எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களின் படகுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth statement on jan 25


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->