தமிழகத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலுநாச்சியாரின் பிறந்தநாளன்று அவரது பெருமையை பேசும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு,  குடியரசு தின விழா  அணிவகுப்பில் வேலுநாச்சியார், வ.உ.சி போன்ற தலைவர்கள் இடம்பெற்றுள்ள தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது  எந்த விதத்தில் நியாயம்?

 மேலும், தமிழகத்தின் ஊர்திகளை நிராகரிப்பது ஒட்டுமொத்த தமிழகத்தை நிராகரிப்பதற்கு சமம். தமிழகத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும்  அதிக பற்று உள்ளதாக கூறும்  பிரதமர் மோடி திருவள்ளுவரை பற்றி பேசுவதும், வணக்கம் தமிழகம் என உரையை தமிழில் தொடங்குவதும், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் போற்றக்கூடிய விஷயம்.  

அதே நேரத்தில்  குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிப்பது   கண்டனத்துக்குரியது. எனவே இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை  பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about republic day parade


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->