குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு - விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று, தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தை சார்ந்தவர்கள் உள்ளனர். மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரர் மக்களை குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. 

பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமூதாயத்தின் தலைமுறைகள், அவர்களது சொந்த மண்ணிலே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது. 

குருவிக்காரர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்பதாகவும், அதே சமயம், குருவிக்காரர் மக்களை குறவர் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவர் சமூதாயத்தினர் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. 

எனவே, குறவர் சமூதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்காரர் சமூகத்தையும் குறவர் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth say about kuravar and kuruvikarar


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->