விஜயின் மாநில அந்தஸ்து கோரிக்கை வைரல்! ‘அந்த கோரிக்கையின் தந்தை நான் தான்' - சீமான்
Vijay statehood demand goes viral I am father that demand Seeman
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற மக்கள்முன் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை இதற்காக ஏற்கனவே 16 தடவைகள் தீர்மானம் நிறைவேற்றியும், மத்திய அரசு இதுவரை எந்த முன்செயலும் எடுக்காததைக் கடுமையாக விமர்சித்தார்.

இதேவேளை, சென்னையின் புழல் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் இந்தக் கோரிக்கையை பாராட்டினார்.
அவர் தெரிவித்ததாவது,"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விஜய் வெளிப்படையாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலில் குரல் கொடுத்தது நான்தான்.
எனது நீண்டநாள் போராட்டக் கோரிக்கையை இப்போது விஜயும் ஆதரிக்கிறார் என்பது மகிழ்ச்சி" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay statehood demand goes viral I am father that demand Seeman