முதலமைச்சர் விஜய் - ராகுல் காந்தி மீட்டிங் கேன்சல்...! எதனால் இந்த மாற்றம்...? - காங்கிரஸ் தரப்பில் வெளியான அதிரடி விளக்கம்!
Vijay Rahul Gandhi meeting cancelled Why this change Congress dramatic explanation
காங்கிரஸ் கட்சியின் எம்.பி கிறிஸ்டோபர் திலக், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது,“முதல் அமைச்சர் விஜய் அரசு தொடர்பான பயணத்திற்காகவே டெல்லி வந்துவிட்டு திரும்பிச் சென்றதாக நான் கருதுகிறேன்.

அவர் பிரதமரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். மேலும், வருகிற ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவும் முதல் அமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி வருகிறார்.
அந்த நேரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது கர்நாடக மாநில தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
அதேபோல், ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி தொடர்பான விவகாரமும் கடந்த இரண்டு நாட்களாக தீவிர ஆலோசனையில் உள்ளது.இதுபோன்ற பல முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் விரிவான பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத காரணத்தால், அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம்.
மேலும், சிலை திறப்பு விழாவையும் தள்ளிவைத்துவிட்டு விஜய் திரும்பிச் சென்றுள்ளார். இதைத் தவிர்த்து வேறு எந்த அரசியல் யூகங்களுக்கும் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay Rahul Gandhi meeting cancelled Why this change Congress dramatic explanation