'காங்கிரசை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்'; தவெக விஜய்க்கு விஜய பிரபாகரன் அட்வைஸ்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இதில், கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0'என்ற பெயரில் பெரும் மாநாட்டை தேமுதிக கடலூரில் நடத்தி வருகிறது. 

இந்த மாநாட்டில் பத்து தீர்மானங்கள் போடப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக, விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அரசு பொது இடத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார். இதனிடையே மாநாட்டில் விஜய பிரபாகரன் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:

விஜயகாந்த் மண்ணிற்கு சென்றாலும், பல லட்சம் தொண்டர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். நமது வாழ்வின் ஒளியாக இருக்கிறார். நிச்சயமாக நமக்கான காலம் உள்ளது. கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றுப்பட்டு செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேமுதிகவின் சேவை, தேவை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தேமுதிகவிற்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்படுகிறதோ அதுதான் உங்களை ஆட்சியில் அமரவைக்கும் என்றும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறுகிறதோ அதுதான் மெகா கூட்டணி என்று அறிவித்துள்ளார். அதுதான் வலிமையான கூட்டணி என்றும், உண்மையை உரக்கச்சொல்ல தேமுதிக தொண்டனால்தான் முடியும் என்று பேசியுள்ளார்.

அத்துடன், ஜனநாயகன் பிரச்சினை போய்க்கொண்டு இருக்கிறது. விஜய் அண்ணாவிற்கு தம்பியாக ஒரு அட்வைஸ் என்று கூறிய விஜய பிரபாகரன், இன்று காங்கிரஸ், கூட்டணிக்காக உங்கள் படத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். அதனை நம்பிவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அது மீனுக்கு தூண்டில் போடுவது போல அதில், மாட்டிக்கொள்ளாதீர்கள் என்றும், நீங்கள் நன்றாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் விருதுநகரில் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நம்பிவிடாதீர்கள். இது என்னுடைய சிறிய அட்வைஸ். விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Prabhakaran advises TVK Vijay not to get into trouble by trusting the Congress party


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->