அஜித் பவார் விமான விபத்தும்..கருப்பு பெட்டியும்...! - AAIB அறிக்கையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...!
Ajit Pawars plane crash and black box Shocking information revealed AAIB report
அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்த அவர், கடந்த ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற துயரமான விமான விபத்தில் உயிரிழந்தது மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அவருடன் மேலும் நால்வரும் உயிரிழந்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை கடுமையாக எதிர்த்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதும், உள்ளாட்சிகளில் ஊழல் குறித்த அவரின் வெளிப்படையான விமர்சனங்களும், இந்த மரணத்தைச் சுற்றி எதிர்க்கட்சிகளில் சந்தேகங்களை கிளப்பின.

மேலும், பெரிய தாக்கத்தையும் தாங்கக்கூடிய விமானத்தின் கருப்பு பெட்டி கூட சேதமடைந்ததாக தகவல் வெளியானதால் சந்தேகம் தீவிரமடைந்தது. அவரின் மகனும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த பரபரப்பான சூழலில்,விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விபத்துக்கான முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் படி, விபத்து நடந்த நேரத்தில் பாராமதி பகுதியில் கடுமையான மோசமான வானிலை நிலவியது. பார்வைத் தூரம் மிகவும் குறைந்ததால் விமானம் தரையிறங்க சிரமம் ஏற்பட்டது. வழக்கமாக 5,000 மீட்டர் பார்வைத் தூரம் அவசியமான நிலையில், அப்போது அதைவிட மிகக் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விமானிகள் தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டு அறையிடம் பார்வைத் தூரம் குறித்து விசாரித்தபோது, 3,000 மீட்டர் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு அளவுகோலுக்கு போதுமானதல்ல என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் தான் கவனித்திருந்தார்.
அவரே விமானிகளுடன் தொடர்பு கொண்டு அனுமதி அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் மட்டுமே புதுப்பிக்கப்பட்டதால், அடையாளக் குறிகள் மங்கியிருந்தன. ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததும் கண்டறியப்பட்டது.
இது பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக் கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன் அதிலுள்ள தரவுகளை மீட்டெடுத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் முழு பின்னணியை வெளிக்கொணர விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Ajit Pawars plane crash and black box Shocking information revealed AAIB report