ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாதுக்கு இளைஞரணி பொறுப்பா?உதயநிதிக்கு ரைட் ஹேண்ட்..அறிவாலயத்தில் பரபர டிஸ்கஷன்!
Is OPS son Ravindranath in charge of the youth wing Udhayanidhi right hand A heated discussion at Arivalayam
தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதலமைச்சராகவும் பதவி வகித்த அவர், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் திமுகவில் இணைந்துள்ளார். இதனால், திமுகவில் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள பொறுப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சி அமைப்பில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும், 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி வழங்கும் வாய்ப்பு இருப்பதாக தேனி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிற தலைவர்கள் தற்போது அமைச்சர்பதவியில் உள்ளதை முன்வைத்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர் தற்போது வசிக்கும் பகுதிக்குட்பட்ட திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என ஒரு தரப்பு கூறுகிறது. மாற்றாக, மாநில அளவிலான பொறுப்பாக திமுக இளைஞரணி துணை செயலாளர் அல்லது துணை தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி ரவீந்திரநாத் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இவை தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
திரை மறைவில் ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் புதிய பொறுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் நகர்வு, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Is OPS son Ravindranath in charge of the youth wing Udhayanidhi right hand A heated discussion at Arivalayam