நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வண்டி! ஹீரோ பைக்குக்கு கடும் போட்டி! குறைந்த விலையில் 65 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா ஷைன் 100! - Seithipunal
Seithipunal


குறைந்த விலை, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய மூன்று அம்சங்களையும் ஒருங்கே எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா ஷைன் 100 சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது. தினசரி அலுவலகப் பயணம், குடும்ப தேவைகள் மற்றும் நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற கம்யூட்டர் பைக்காக இது பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

டெல்லியில் இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,004 முதல் தொடங்குகிறது. ஆன்ரோடு விலை சுமார் ரூ.77,000 வரை இருக்கும். இந்த விலை வரம்பில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மாடலுக்கு நேரடி போட்டியாளராக ஷைன் 100 பார்க்கப்படுகிறது. குறைந்த முதலீட்டில் நம்பகமான இருசக்கர வாகனம் தேடுபவர்களுக்கு இது பொருத்தமானதாக கருதப்படுகிறது.

ஹோண்டா ஷைன் 100-ல் 98.98cc திறன் கொண்ட ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. PGM-FI மற்றும் eSP தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த இன்ஜின் 7.38 PS சக்தி மற்றும் 8.05 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளதால் நகரப் போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக இயக்க முடியும். 99 கிலோ எடை கொண்டதால் குறுகிய தெருக்களிலும் சுலபமாக மெனுவேர் செய்ய முடிகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர் வரை செல்கிறது.

இந்த பைக்கின் முக்கிய பலம் அதன் மைலேஜ். நிறுவனம் தெரிவிப்பதன்படி லிட்டருக்கு 65 கிலோமீட்டர் வரை செல்கிறது. பயனர்களின் அனுபவங்களின்படி 65 முதல் 68 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது என கூறப்படுகிறது. 9 லிட்டர் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது. ஒவ்வொரு சர்வீஸிற்கும் சுமார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 3 ஆண்டு அல்லது 42,000 கிலோமீட்டர் உத்தரவாதம் வழங்கப்படுவது கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.

குறைந்த செலவில் நீண்டநாள் பயன் தரும், நம்பகமான தினசரி பயண பைக்காக ஹோண்டா ஷைன் 100 திகழ்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A car for middle class families A hero bike for competition Honda Shine 100 gives 500 km mileage at a low price


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->