விஜய் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்...! - ‘ஜனநாயகன்’ ஆர்ப்பாட்டம் குறித்து புகழேந்தி அறிவிப்பு
Vijay not be intimidated by threats Pugazhendhi announcement regarding Democrat protest
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி வா.புகழேந்தி, ஓசூரில் உள்ள தனது அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமையை குறிவைத்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.“எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. களமிறங்கினால், மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் டெபாசிட் பறிபோகுவது உறுதி.

இது கணிப்பு அல்ல; அரசியல் யதார்த்தம்” என அவர் கூறினார்.மேலும், “பா.ஜ.க.வுடன் கைகோர்த்து சென்றதே அ.தி.மு.க.வை அரசியல் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டது. இன்று களத்தில் இருப்பது தி.மு.க.வும், தமிழக வெற்றிக் கழகமும் மட்டுமே. அ.தி.மு.க. என்பது பெயரளவுக்கே மிஞ்சியுள்ளது” என அவர் சாடினார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாகவும் பேசிய புகழேந்தி, “அந்த படத்தை மையமாக வைத்து ஒரு அரசியல் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்” என்றார்.நடிகர் விஜயை குறித்து அவர் பேசுகையில், “விஜய் மிரட்டலுக்கு தலை குனியாதவர்.
அவர் அடி பணிந்து அரசியல் முடிவுகளை மாற்றிக் கொள்வார் என்று யாராவது நினைத்தால் அது பெரும் தவறு” எனத் தெரிவித்தார்.தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து, “இன்னும் 10 நாட்களில் எனது முடிவை தெளிவாக அறிவிப்பேன்” என கூறி பேட்டியை நிறைவு செய்தார்.
English Summary
Vijay not be intimidated by threats Pugazhendhi announcement regarding Democrat protest