விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு...! - ஆதரவளிக்கும் ஓபிஎஸ்
Vijay has our moral support OPS supports
இன்று சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம்.

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உடன் இருப்பவர்களுக்கு பதவி பெற்றுத்தரப்படும்.
அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை.
கட்சி தொடங்கிய பிறகு விஜய் இன்று வரை நன்றாக தான் செயல்பட்டு வருகிறார். விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay has our moral support OPS supports