விஜய் கையில் வேற லெவல் ப்ளான்!பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? பரிசீலிக்கும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க் கடன்களுக்கு ஏற்கனவே பகுதி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பட்ஜெட்டுக்கு முன்பாக விவசாயிகளுக்கான முழுமையான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 25-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கான சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். அதன்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரை அல்லது கடன் தொகையின் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ரூ.50,000-ஐ தாண்டி கடன் பெற்ற விவசாயிகளுக்கும் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பெரிய விவசாயிகளுக்கும் தலா ரூ.5,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 14.22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. பகுதி தள்ளுபடி மட்டும் போதாது என்றும், கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை நெருக்கடியில் இருந்து மீட்க முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியே அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் மேட்டூர் அணை நீர்திறப்பு, குறுவை சாகுபடி பாதிப்பு, மின்வெட்டு, விவசாய நெருக்கடி மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே விவசாயிகளுக்கான கூடுதல் நிவாரண அறிவிப்புகளை வெளியிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்க புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களின் முழு விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடன் தள்ளுபடியால் ஏற்படும் நிதிச்சுமை, பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து நிதித்துறை அறிக்கை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, முழு கடன் தள்ளுபடி குறித்த தகவல்கள் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையிலேயே உள்ளன.

ஆனால், மாநில பட்ஜெட்டுக்கு முன்பாக விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு கூடுதல் நிவாரணத் திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay has a game changing plan Full crop loan waiver before the budget Tamil Nadu government considering the move


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->