சைலாண்டா வேலையை முடித்த விஜய்! வேட்பாளர் பட்டியல் ரெடி! அடுத்த வாரம் ஆட்டத்தை தொடங்கும் விஜய்! குஷியில் தவெகவினர்! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வேட்பாளர் தேர்வு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி தவெகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், இந்த சட்டப்பேரவைத் தேர்தலை தவெக மிக முக்கியமானதாகக் கருதி செயல்பட்டு வருகிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற உறுதியுடன், விஜய் தலைமையில் தேர்தல் யுக்திகள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள ‘விசில்’ சின்னத்தை கட்சியின் அடையாளமாகவும், முக்கிய பிரச்சார ஆயுதமாகவும் மாற்ற தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரம் எங்கு தொடங்குவது என்பது குறித்தும் கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மதுரை, கன்னியாகுமரி, நெல்லை அல்லது தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கலாம் என பேசப்படுகிறது. தென் தமிழ்நாட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குவது கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் அடங்கிய ஆரம்ப பட்டியலை தவெக தலைமை ஏற்கனவே தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போட்டியிட விருப்பம் தெரிவித்து வரும் நபர்களின் முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் சமூக பின்னணி, அரசியல் அனுபவம், மக்கள் தொடர்பு, உள்ளூர் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த பணிகள் முடிவடைந்ததும், தகுதியான வேட்பாளர்களை நேரடியாக நேர்காணல் செய்யும் திட்டமும் தவெக தலைமையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நேரடியாக வேட்பாளர்களை சந்தித்து, அவர்களின் அரசியல் பார்வை மற்றும் மக்கள் பணியில் ஈடுபாடு குறித்து கேட்டு அறிந்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி அளவில் செல்வாக்கு பெற்றவர்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பிப்.2-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர் பட்டியல் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay completes Silenta work Candidate list ready Vijay will start acting next week


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->