விஜய் வருகை அரசியல் அதிர்ச்சி… தி.மு.க. கலக்கம்...! - மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்
Vijay arrival causes political shock DMK unsettled Central Minister strong criticism
டெல்லியில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கும் அவர் பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் புதிய அரசியல் நுழைவு பாஜகவை பதறவைக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “விஜய்யை பார்த்து பயப்பட வேண்டியது பாஜக அல்ல, தி.மு.க. தான்.
அவர்களின் அச்சம் தெளிவாக தெரிகிறது. ஒரு பக்கம் விஜய்யின் அரசியல் களம் இறக்கம், மறுபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமை – இந்த இரண்டுமே தி.மு.க.க்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தான் இலவச அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிடுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கலாசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது,” என கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Vijay arrival causes political shock DMK unsettled Central Minister strong criticism