விஜய்யின் 100 நாள் ஆட்சி! திரைத்துறை சார்பில் பாராட்டு விழா? 100-வது நாள் கொண்டாட்டத்திற்கும் தவெக தீவிரம்!ஜெகதீஷ் பழனிசாமியின் பலே திட்டம்? - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பதவியேற்று விரைவில் 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், அந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், திரைத்துறை சார்பிலும் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வரின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி மூலம் பல்வேறு திரைப்பிரபலங்கள் சந்திப்பு மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தவெக ஆட்சியின் 100-வது நாளை முன்னிட்டு கட்சி சார்பில் சிறப்பு விளம்பரப் படம் ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளம்பரப் படத்தில், திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனுடன், திரைத்துறை சார்பாக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகராக இருந்த காலத்தில் அவர் படைத்த சாதனைகளும், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று மேற்கொண்டு வரும் நிர்வாகப் பணிகளும் இணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

பொதுவாக திரைப்படங்கள் 100 நாட்கள் நிறைவு பெறும் போது மட்டுமே விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், ஆட்சியின் 100-வது நாளை முன்னிட்டு இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் முயற்சி அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இருப்பினும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் அல்லது திரைத்துறை அமைப்புகள் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்கள் காத்திருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay 100 day reign A felicitation ceremony by the film industry TVK gears up for the 100thday celebration Jagadish Palanisamy master plan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->