ஆதரவு கேட்டு CM ஸ்டாலினை சந்திக்கும் சுதர்சன் ரெட்டி!
vice presidential election TN Chief Minister MK Stalin
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, மாநில வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக, கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தனது முதல் அரசியல் பயணத்தை தமிழகத்தில் தொடங்க உள்ளார். ரெட்டி நாளை சென்னை வருகிறார். காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை கோருவார். இந்த சந்திப்பு அண்ணா அறிவாலயம் அல்லது ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஸ்டாலினுடன் சந்திப்பைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் ரெட்டி தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவைப் பெற உள்ளார்.
மாலை நேரத்தில், சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை அவர் சந்திக்கிறார். அங்கு எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, தனது பிரசாரத்தை தமிழகத்தில் தொடங்கும் சுதர்சன் ரெட்டி, அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சிகளின் வலுவான ஆதரவைப் பெற திட்டமிட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
vice presidential election TN Chief Minister MK Stalin