வெளியானது ரூம் பாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!
room boy movie first look poster released
கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் இயக்கியிருக்கும் படம் ‘ரூம் பாய்’. இந்த படத்தின் மூலம் நிகில் என்பவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக அரண்மனை 4 படத்தில் நடித்த ஹர்ஷா நடித்துள்ளார்.
இவர்களுடன் இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் என்று பலர் நடித்துள்ளனர். ஏசிஎம் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார்.
ஒரு குடும்ப சென்டிமென்ட்டுடன் கூடிய குற்றப்புலனாய்வு திரில்லர் கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
room boy movie first look poster released