அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து - பயணிகளின் நிலை என்ன?
govt bus accident in near thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் 140 இன்று காலை வழக்கம்போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்தப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் ஒருபக்க சக்கரம் கீழே இறங்கி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால், பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பொன்னேரி பணிமனை அதிகாரிகள் விரைந்து வந்து அந்தரத்தில் தொங்கும் பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
govt bus accident in near thiruvallur