துணை குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


துணை குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அறிவித்துள்ளது.

தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. 

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அறிவித்துள்ளது.

 இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர், முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் திருமதி மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் 16 எம்.பி.க்களும் அவருக்கு வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice president Election chandrasekar rao support to Markret Alwa


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->