திமுகவின் ரவுடிச ஆட்சி.! சப்-இன்ஸ்பெக்ட்ர் தற்கொலை ஆடியோ.! உச்சகட்ட அராஜகத்தை கையில் எடுக்கும் திமுகவினர்.! - Seithipunal
Seithipunal


அராஜகத்தின் உச்சமாக திமுக பிரமுகர்கள் வழக்குப்பதிவு விவகாரங்களில் தலையிட்டு, பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் ரவுடிகளால் காவல்துறையினருக்கும், காவல்துறையால் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் உயர் அதிகாரியாக இருப்பவர், அதிரடி மன்னன் என்று தமிழக மக்களால் போற்றப்படும் டிஜிபி சைலேந்திரபாபு இருந்தும் தமிழகத்தின் காவல்துறையினருக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவர், திமுக பிரமுகர்கள் வழக்கு விவகாரங்களில் தலையிட்டு பணி செய்ய விடாமல் தடுப்பதாகும், இதனால் கடும் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது, வேலூர் மாவட்ட காவல்துறை மட்டுமல்லாமல், தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அவரின் அந்த ஆடியோவில் திமுக பிரமுகர் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தனக்கு தொல்லை கொடுப்பதாக உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் மணல் திருடுகின்றனர், போன் செய்து ஆபாசமாக பேசுகின்றனர், இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகமாகிவிட்டது என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தற்கொலை செய்து கொண்டு விட்டால், எனக்கு கிடைக்கக்கூடிய பணத்தை தமிழக அரசிடமிருந்து பெற்று, எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொடுத்து விடுங்கள் என்று அந் ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளி தெரிவிக்கையில், உதவி ஆய்வாளர் சீனிவாசன் வெளியிட்டிருந்த ஆடியோ குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியாக உள்ள திமுகவினர் இதுபோன்று காவல்துறையினரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சி என்றால் அது ரவுடிகளின் ஆட்சி என்று ஒரு பெயர் பெற்றிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக தற்போதைய இந்த ஆட்சியும் அமைந்திருப்பது இது ஒன்றே சாட்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellore dmk members worst


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->