81 வயது முதியவரை குறிவைத்த சைபர் கும்பல்...! - 15 கோடி ரூபாயை இழந்த கிரானைட் தொழிலதிபர்...!
Cyber Gang Targets 81 Year Old Man Granite Tycoon Loses 15 Crores
கர்நாடக மாநிலம் பெலகாவி நேதாஜி நகரைச் சேர்ந்த 81 வயது கிரானைட் தொழிலதிபர் அஜித் கோபாலகிருஷ்ண சராஃபிடம், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வாட்ஸ்அப் மூலம் ஒரு நபர் பேசியுள்ளார்.
தன்னை டெல்லி சிபிஐ அதிகாரி சிவசுப்பிரமணியம் என்று அறிமுகப்படுத்திய அந்த நபர், தொழிலதிபர் நரேஷ் கோயல் சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் அஜித் சராஃபுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து மிரட்டியுள்ளார்.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கவும், வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கவும் 7 நாட்களுக்குள் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தகவலை வெளியே சொன்னால் அவரையும் அவர் மனைவியையும் கைது செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், தனது வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.15.45 கோடியை அந்த நபர் கூறிய கணக்குகளுக்குப் படிப்படியாக அனுப்பியுள்ளார்.
மேலும், 15 நாட்களுக்கு மேலாகியும் பணம் திரும்ப வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பெலகாவி இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோசடி கும்பலின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.90 லட்சத்தை முடக்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Cyber Gang Targets 81 Year Old Man Granite Tycoon Loses 15 Crores