சிறார் உடல் பருமன்: உலக அளவில் இந்தியா எந்த இடம் பிடித்துள்ளது தெரியுமா...? - 4.1 கோடி சிறுவர்கள் பாதிப்பு
Childhood Obesity Do You Know Where India Ranks Globally 41 Million Children Affected
'உலக உடல் பருமன் அட்லஸ் 2026',உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதாக அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4.1 கோடி சிறுவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதும், அதில் 1.4 கோடி பேர் அதீத உடல் பருமன் பாதிப்புடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
இதன் மூலம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதிகரித்து வரும் சிறார் உடல் பருமன் ஆகிய இருமுனை சவால்களை இந்தியா ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது.
கடந்த 1975-ல் 4 சதவீதமாக இருந்த சிறார் உடல் பருமன் பாதிப்பு, தற்போது உலக அளவில் 20 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக, உடல் எடை குறைந்த சிறுவர்களை விட உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகள் இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பின் வேகத்திற்கு ஏற்ப இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
English Summary
Childhood Obesity Do You Know Where India Ranks Globally 41 Million Children Affected