கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு...! - பழைய குற்றவாளி கைது - Seithipunal
Seithipunal


சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில், பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் பழைய குற்றவாளி உட்பட மூவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தனியார் ஐடி நிறுவன ஊழியர் ராஜேஷ் குமாரின் தாய் தமிழ்செல்வி (63), கடந்த 14-ம் தேதி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இது குறித்து அசோக் நகர் காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ராயபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (49) என்பவரைக் கைது செய்தனர்.

இந்த விசாரணையில், பறித்த நகையைத் தனது நண்பர் குமரேசன் மூலம் தனியார் வங்கியில் அடமானம் வைத்து 5 லட்சம் ரூபாய் பெற்றதும், அதில் ஒரு பகுதியை கண்ணகி நகரைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குமரேசன் மற்றும் அனிதாவையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.91 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட சீனிவாசன் மீது ஏற்கனவே 16 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chain Snatched from Elderly Woman Visiting Temple Habitual Offender Arrested


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->