வெல்லம் உருகுதய்யா முருகா.. விடியல் ஆட்சியிலே.. வெளியான வீடியோ.! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு, சமீபத்தில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள்,  மல்லித்தூள், கடுகு,  சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது டோக்கன் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேர் வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு சில பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும், 21 பொருட்களுக்கு மாறாக 18 பொருட்கள் உள்ளதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவித்துள்ளனர். கோதுமை, மைதா போன்ற பொருட்களில் வண்டு இருப்பதாகவும், வெல்லம் தரமற்ற நிலையில் உள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வை கலாய்த்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், டி எம் சௌந்தரராஜன் பாடிய உள்ளம் உருகுதய்யா முருகா என்ற பாடலை வெல்லம் உருகுதய்யா முருகா என்ற வீடியோவை ஜெயகுமார் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellam uruguthaiyaa muruga song release for jayakumar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->