சாதிவாரிக் கணக்கெடுப்பு: தேர்தலுக்கான திடீர் U_TURN அறிவிப்பு! திருமாவளவன் விமர்சனம்!
VCK thirumavalavan Caste Census Bihar Elections
விசிக திருமாவளவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இந்திய ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது எதிர்க்கட்சிகளின் வெற்றி.
ஆனால், இது எப்போது நடக்கும்? 2021இல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தள்ளிப் போயுள்ள நிலையில், அடுத்து 2031 இல் தானே
அந்த கணக்கெடுப்பு நடக்கும். அப்படியெனில், 2031இல் தானே இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த இயலும். அதற்கு ஏன் இப்போது இந்த அறிவிப்பு?
2029 பொதுத் தேர்தலைச் சந்திக்காமலேயே 2031 இலும் இவர்கள் ஆட்சியில் நீடிப்பார்களோ? அப்போது இதனை நடைமுறைப் படுத்துவார்களோ?
உண்மையில், நடைபெறவுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தானே இந்த திடீர் #U_TURN அறிவிப்பு.
என்றாலும், இந்த அறிவிப்பைச் செய்ய வைத்த பீகார் மக்களுக்கு எம் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
VCK thirumavalavan Caste Census Bihar Elections