வெறும் 4 சீட்டுக்காக அத்துமீறாமல் அடங்கி ஒடுங்கி போகும் திருமாவளவன்.!உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் சைலன்ட் மோடு.!! - Seithipunal
Seithipunal


தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில், நீங்கள் நீதிபதி ஆகியது நாங்கள் உங்களுக்கு போட்ட பிச்சை என்று திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி போலீசாரால் கைதும் செய்யப்பட்டார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ் பாரதி, தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தலித் மக்களை அவமானம் செய்யும் விதமாக பேசினார்.

இதனையடுத்து அவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, கடந்த வருடம் மே 23 ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "ஆர் எஸ் பாரதி பேச்சில் திராவிட இயக்கத்தின் சிறப்புகளையும் இயக்கத்தின் பலனாய் கிடைத்த வெற்றியும் பட்டியலிட அவ்வாறு பேசினார். நீதிபதிகள் குறித்து மட்டுமல்லாமல் மற்ற துறைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். நீதிபதி நியமனம் குறித்து அவர் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது அவமதிக்கும் நோக்கத்துடன் பேசப்படவில்லை" என்று வாதாடினார்.

இதனை கேட்ட நீதிபதி சதீஷ் குமார் அவர்கள், "இது அவமானப்படுத்துவதாக இல்லையா? உங்கள் வாதம் சரிதானா? திராவிட இயக்கம் இல்லாவிட்டால் அவர்கள் (தலித்) சுயமாக மேல் வந்து இருக்கவே முடியாது என்று சொல்ல வருகிறீர்களா? திமுகவால் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா? 

மக்களின் பிரதிநிதி., ஒரு சட்டத்தை ஏற்றக்கூடிய இருக்கும் இடத்தில் இருப்பவர்., ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருந்து வருகிறவர்., இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், "பட்டியல், பழங்குடி மக்களுக்கும் யாருமே திறமை இல்லை என்பது போன்று ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார். பட்டியல் இனத்தவர்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணமே திமுக போட்ட பிச்சை தான் என்று ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். ஆர் எஸ் பாரதி யின் பேச்சு ஒட்டுமொத்தமாக அந்த சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரின் பேச்சுக்கு பல சமுதாய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெறுப்பையும், பகை உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள அந்தப் பேச்சின் காணொளி ஆதாரங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மனுதாரர் இந்த வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும். தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்யுமாறு ஆர் எஸ் பாரதி கோர முடியாது" என்று வாதிட்டார்.

இதனையடுத்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை வழக்கில் முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு பெரிய விவகாரம் நடந்து கொண்டு இருக்க, தலித் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு என்று மார்தட்டும் விடுதலை சிறுத்தைகளை கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால், தோழமை சுட்டுதலுடன் நிறுத்தி கொண்டு கூட்டணி தர்மத்தை காப்பாற்றியது. காப்பாற்றியும் வருகிறது.

திமுகவின் ஆர்.எஸ். பாரதி சொல்லிய பிச்சை என்ற வார்த்தையை திமுக கூட்டணியில் இல்லாத எந்த ஒரு கட்சி நிர்வாகியும் சொல்லி இருந்தால் இந்நேரம் அடங்கமறு., அத்துமீறு என்று தமிழக சாலைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும்,  ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கொள்கையை பின்பற்றும் திக, திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பொங்கி எழுந்து, போராட்டத்தில் குதித்து., தமிழகத்தை உண்டு இல்லை என்று கலவரம் செய்து இருப்பார்கள் என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 4 சீட்டுகள் தான் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 4 சீட்டுக்காகவா திருமாவளவன் எம்பி அத்துமீறமால் அடங்கிப்போய் இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK ONLY 4 SEAT


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->