ஆகஸ்ட்-30ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!! திமுக கூட்டணி கட்சியின் அவசர அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

திமுக கூட்டணியில் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் சமுதாய பக்கத்தில் அறிவித்துள்ளார.

அந்த பதிவில் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வரும் 30.8.2023 அன்று சென்னையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என அவசரமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பு இன்றி திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், திமுகவிலிருந்து விசிகவை பிரிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK called district secretaries meeting will be held on August30


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->